தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் காட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் பாமகவிற்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதேபோன்று தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. ஆனால் அதிமுக கறார் காட்டியதன் காரணமாக தேமுதிக இடையே அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில் அதிமுகவினர் உடன் தேமுதிக நிர்வாகிகள் நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது ஒருபுறமிருக்க தங்களுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுகதான் கெஞ்சுகிறது. தாங்கள் அவர்களை கெஞ்சவில்லை என்று எல்.கே சதீஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக ஆசைப்பட்டதில்லை. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வர தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் கூறுகின்றன என்று கூறியுள்ளார்.