Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நேரம் நெருங்கி விட்டது…” இப்படித்தான் வாக்களிக்க வேண்டும்”…. சிவகங்கையில் செய்முறை விளக்கம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தனர்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக  12-ஆம் தேதி முதல் கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்திய வாக்களிக்க உள்ளதால், இந்தத் தொகுதிகளில் மொத்தம் 1679 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இதன் காரணமாக சிவகங்கை பேருந்து நிலையம் மற்றும் நேற்று திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நகராட்சி ஆணையரான  அய்யப்பன் தலைமையில் தேர்தல் அதிகாரிகளோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கான செய்முறை விளக்கத்தை பொதுமக்களுக்கு அளித்தார்.

இந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விவிபேட் செய்முறை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான சிந்து பொது மக்களுக்கு விளக்கினார். இந்த எந்திரம் மூலமாக பொதுமக்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு செய்முறையை தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல்  அலுவலரான ஜெயந்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கமலக்கண்ணன் இருவரும் முன்னிலை வகித்து நடத்தினர். இதில் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளரான செல்வம் மற்றும் கிராமர் நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Categories

Tech |