மேட்டூர் அணைக்கு காவேரி பகுதிலிருந்து வரும் நீர்வரதானது குறைந்து உள்ளது .
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக காணப்படுகிறது. காவிரி நீர்த்தேக்க பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே இருக்கிறது. 172 கனஅடி தண்ணீர் ஆனது நேற்று அணைக்கு வந்துள்ளது இன்று இதன் அளவு அதிகரித்து 153 கன அடி தண்ணீராக உள்ளது.
ஆனால் அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியிடப்படுவதால், அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது. நீர் மட்டமானது நேற்று 102 . 93 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் படி 102.83 அடியாக சரிந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் அணையின் நீர்மட்டம் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது .