Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தினசரி சாப்பாட்டுடன்… வாரத்திற்கு மூன்று நாள் சாப்பிட்டால் போதும்… சிறுநீரகத்தில வளர்ற கற்கள் எல்லா காணாம போயிரும்..!!

வாழைத்தண்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

இளம் வாழைத்தண்டு      – 2 (பெரியது)
கடுகு, உளுத்தம்பருப்பு    – 2 டீஸ்புன்
எண்ணெய்                             – 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு                     – 1  1/2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை                    – ஒரு கொத்து
பெரிய வெங்காயம்           – 1
மஞ்சள்தூள்                          – அரை ஸ்பூன்
உப்பு                                          – ருசிக்கேற்ப
தேங்காய்                               – ஒரு துண்டு
சின்ன சீரகம்                        – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்                 – 2

செய்முறை: 

இளம் வாழைத்தண்டின் மேலுள்ள தடிமனான பகுதியையும், மேலுள்ள வழுவழுப்பான பகுதியையும் நிக்கினபிறகு, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, அதிலுள்ள நாரையும் விரலால சுத்தி எடுத்துட்டு, தண்ணீர்ல போட்டுக்கணும்.

பெரிய வெங்காயத்தை தோலை சிவிட்டு, சின்ன துண்டுகளாக நருக்கி எடுத்துக்கணும். பிறகு அடுப்புல கடாயை வச்சி எண்ணெய் உற்றி நல்லா சூடானதும், அதுல கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு நல்லா பொரிஞ்சதும், கடலை பருப்பு  சேர்த்து நல்லா வதக்குனதும், கருவேப்பிலை, நறுக்கி வச்ச வெங்காயத்தை போட்டு நல்லா வதக்கிகணும்.

மேலும் வதக்கிய வெங்காயத்துடன், நறுக்கி வச்ச வாழை தண்டை தண்ணீரை நல்லா வடிக்கடினபிறகு போட்டு, மஞ்சள்தூள், ருசிக்கேற்ப உப்பு போட்டு நல்லா கிளறிவிட்டுக்கணும்.

பின்னர் கிளறிவிட்ட வாழைத்தண்டு கலவையில், அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி, முடி வச்சி நல்லா வேக வைக்கணும். பிறகு தேங்காய் கிரினதும், துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு, சின்ன சீரகம், பச்சை மிளகாய்யை போட்டு நல்லா பரபரப்பாக அரைச்சி எடுத்துக்கணும்.

அடுத்து வேக வச்ச வாழைத்தண்டு கலவையில, அரைச்சி வச்ச தேங்காய் கலவையை போட்டு நல்லா கிளறிவிட்டதும், மறுபடியும் முடி வச்சி நல்லா 2 நிமிஷம் வேக வச்சி தண்ணீர் வற்றியதும், கெட்டியானபிறகு இறக்கி வச்சி சூடான சாதத்துடன் பரிமாறினால், ருசியான வாழை தண்டு பொரியல் ரெடி.

Categories

Tech |