விஜய் டிவி பிரபலம் நவீன் முதல் முறையாக தனது ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நவீன் . இவர் கமல் ,விஜய் சேதுபதி என பல ஹீரோக்களின் குரல்களில் மிமிக்ரி செய்து அசத்தியவர். இதன்பின் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் . தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாவம் கணேசன்’ என்ற தொடரில் நவீன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நடிகர் நவீனுக்கு கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது . இதையடுத்து கடந்த வருடம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது . இந்நிலையில் நவீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ஒரு வயது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .