தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைககளின் படி வீடு வீடாக சென்று ஒட்டு கேட்கும் போது 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும், ஓட்டிற்கு பணம் கொடுக்க கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதையடுத்து சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதன்படி பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1800-425-7012 என்ற தொலைபேசி வாயிலாகவும் eVIGIL என்ற செயலின் மூலமாகவும் தெரிவிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக 1950 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.