நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு விமான சேவை முக்கிய பங்கு அளித்து வரும் நிலையில் ஐந்து நாடுகளில் இச்சேவை இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேகம் மற்றும் தொலைதூர இணைப்புகள் காரணமாக பயணிகளுக்கு விமான போக்குவரத்து மிகவும் விருப்பமான சேவையாக உள்ளது. இந்நிலையில் விமான சேவை இல்லாத ஐந்து நாடுகள் மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இவ்வைந்து இடங்களிலும் காலநிலை மற்றும் இடவசதி பற்றாக்குறையாலும் விமான சேவையை நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.
அன்டோரா
மெனாக்கோவை விட பெரிய பரப்பளவு கொண்ட இந்நாடானது ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆனால் இந்த நாட்டை சுற்றி சுமார் 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் உயரமாக அமைந்துள்ளதால் விமானங்களை இயக்குவது கடினமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்நாட்டு இணை அதிபரை சந்திப்பதற்காக மட்டும் கட்லோனியாவில் அன்டோரா சியு விமான நிலையம் உள்ளது.
லிச்சென்ஸ்டைன்
இந்நாடு சுமார் 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் சில கிலோமீட்டர் நீளத்திணையும் கொண்டுள்ளது. மேலும் 75 கிலோமீட்டர் முழு சுற்றளவையும் கொண்டுள்ளதால் இந்நாட்டில் விமான சேவையை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் சூரிச் விமான நிலையம் இருப்பதால் மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்டிக்கன்
உலகின் மிகச் சிறியநாடான வாட்டிக்கன் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டுள்ளது. மேலும் இந்நாட்டிற்கு கடல்வழி பயணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினும் வாட்டிக்கன் கிறிஸ்துவ மத முக்கியத்துவம் மற்றும் சுற்றுலா தளமான பகுதி என்பதால் மக்கள் பக்கத்து நாடான சியாம்பினோ மற்றும் ஃபியமிசினோ விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள்.
மொனாக்கோ
இந்நாடு உலகின் பிற நாடுகளுடன் பிரெஞ்சு கடற்கரையின் வழியாக இயங்கும் ரயில் சேவை இணைக்கிறது. மேலும் இந்நாட்டின் மோசமான இடநெருக்கடி யாலும் 40,000 மக்கள் தொகையாலும் இங்கு விமான சேவையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சான் மரினோ
இத்தாலியால் சூழப்பட்ட சான்மரினோ வாட்டிகன் மற்றும் ரோம் நகருக்கு அருகில் உள்ளது. நாட்டின் பரப்பளவு 40 கிலோ மீட்டருக்கும் குறைவாக உள்ளதால் இங்கு விமான நிலையம் இல்லை. மேலும் கடல் வழி பயணமும் இங்கு கிடையாது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் வாசிகளும் இந்நாட்டை சுற்றியுள்ள நாடுகளான போலோக்னா, புளோரன்ஸ் பீசா மற்றும் வெனிஸ் நாடுகளின் விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.