அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்கு ஆசைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவின் இந்த முடிவு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா தொடர்ந்து அமைதியாக இருந்து வந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் சசிகலா இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இது சசிகலா ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories