Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. ரொம்ப உறுதியா இருக்காங்க – TTV வருத்தம்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ள்ளனர். மேலும் சில கட்சிகளில் கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகின்றது. அதிமுக கட்சி கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தங்களுக்கும் அதே தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்டது. இதனால் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா இபிஎஸ் ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.

ஆனால் எடப்பாடி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதிமுக அமைச்சர்கள் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும் பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை.

ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன் ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் இந்த திடீர் அறிக்கை தன்னை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் சசிகலா தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய தன் வலியுறுத்தியதாகவும், சசிகலா தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்ததால் அவர் முடிவை மாற்ற முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |