நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவுடன் பேச்சுவார்தை நடைபெற இருக்கின்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணத்தை அவர்களிடம் பிரதிபலிப்போம். அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு இரு கட்சிகளும் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துகொண்டு வகையிலே இலக்கை நிர்ணயித்துப்போம்.
எதிர்கட்சியினுடைய பொய் வாக்குறுதிகளை அதிமுகவின் நிஜ வாக்குறுதிகளும், இந்த மாதத்தில் ஏழை, எளிய , நடுத்தர மக்களுக்கு அதிமுக அறிவித்திருகின்ற சலுகைகளும் தேர்தலிலே வெல்லும். கூட்டணியை உறுதி செய்ய 24மணி நேரம், 48மணி நேரம் என யாரும் காலக்கெடு வைக்கவில்லை.கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட முயற்சிக்கு எங்களுடைய பயணத்தை மேற்கொள்வோம்.
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு வைத்திருக்கிறார்கள். அந்த குழுவோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய குழு சந்தித்து பேச இருக்கிறது. ஜனவரி முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய மண்டல கூட்டங்களில் கலந்துகொண்டு, மூத்த முன்னணி தலைவர்களை சந்தித்து அந்த பகுதியிலே வெல்லக்கூடிய தொகுதி…. வேட்பாளர்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.
மாணவர் அணி கூட்டம் நடந்தது.இளைஞர் அணி தலைவரோடு ஆலோசனை நடந்தது. இப்படி தொடர்ந்து தேர்தல் பணி, தேர்தல் வியூகம், வெற்றி வியூகம், ஆலோசனைகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையிலே எங்களுக்கு கிடைக்கக்கூடிய எண்ணிக்கை, வாய்ப்பை வாய்ப்பை நூறு சதவீதம் பயன்படுத்தி வெற்றி பெற கூடிய உறுதியான நிலையை ஏற்படுத்தி, சட்டமன்றத்திலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய குரல் ஒழிக்க கூடிய உறுதியான நிலையை இந்த முறை ஏற்படுத்துவோம்.
தமிழகத்திலே தேர்தல் நெருங்க நெருங்க எத்துணை புதிய அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். மக்கள் மனதிலே முதல் அணியாக, வெற்றி அணியாக அதிமுகவே செயல்படுகிறது. எங்களுடைய சைக்கிள் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதிலே எங்களுடைய தொடர் சட்டம் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அது இறுதிநாள் வரை தொடரும்.
அது கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தான் நாங்க இருக்கிறோம். சைக்கிள் சின்னம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலேயே எங்களுடைய செயல்பாடு இருக்கிறது. அது தேர்தல் ஆணையத்தினுடைய கடைசி நாள் வரை உறுதியாக தொடரும், சைக்கிள் சின்னம் கிடைக்கக்கூடிய முயற்சி மேற்கொள்கிறேன் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.