இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியாக செல்வதற்கு பாகிஸ்தான் பாதையை திறந்து விட்டுள்ளது
இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறந்து செல்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதனால் பிரதமர் மோடி கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டிற்கு செல்லும் போது அவ்வழியை பயன்படுத்த முடியாமல் பிரதமரின் விமானம் வேறு வழியாக சென்றது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கர்தார்பூர் குருத்வராவுக்கு செல்லும் வழியை பாகிஸ்தான் திறந்து விட்டுள்ளது . நள்ளிரவு 12.41 மணியளவில் திறக்கப்பட வான்வெளியில் விரைவில் இந்திய விமானம் பயணிக்க தொடங்கும் என தெரிகிறது.