செல்போன் காணாமல் போனதால் பெற்றோர்களுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மகன் நிஷாந்த் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக தனது செல்போனை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பருடைய வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு மாலை செல்போனை எடுக்க சென்றபோது அது காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதைப் பற்றி தனது பெற்றோர் கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த பொது நிஷாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.