Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளை முன்னிட்டு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளை முன்னிட்டு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை திருவிழாவை முன்னிட்டு அரூர் கோட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 13ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |