Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அறிவிப்பால் இரவு முழுவதும் தூங்காமல் துடித்த பிரபலம்… வேதனை…!!!

தமிழகத்தில் சசிகலா வெளியிட்ட அறிவிப்பால் டிடிவி தினகரன் இரவு முழுவதும் தூங்காமல் துடிதுடித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுமட்டுமன்றி சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்து விடுதலையான சசிகலாவால் அரசியலில்ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா நேற்று பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். மேலும் நான் என்றும் பதவிக்காகவும், பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து சசிகலாவின் இந்த அறிவிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இரவு முழுவதும் டிடிவி தினகரன் தூங்காமல் இருந்துள்ளார். நடுராத்திரியில் தனது ஆதரவாளர்கள் சிலருக்கு போன் செய்து வரவழைத்து அடுத்து என்ன செய்யலாம். சசிகலா அறிவிப்பால் தேர்தலில் அமமுகவுக்கு பின்னடைவு ஏற்படுமா? யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

Categories

Tech |