Categories
அரசியல் மாநில செய்திகள்

என் போனை காட்டவா ? உங்க சீட்டு யாருக்கு வேணும் ? அதிமுகவை அதிர வைத்த சுதீஷ்….!!

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணியை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வந்த தேமுதிக கூட்டணியில் அதிமுகவுடன் அதிக சீட் கேட்டு பிடிவாதம் பிடித்து வருகின்றனர். கூட்டணி தொடர்பாக அதிருப்தி கருத்துக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்த் மனைவி சகோதரர் சுதீஷ் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று கட்சி நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் பேசிய சுதீஷ், தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்க வில்லை எனில் அதிமுக என்ற கட்சியை தற்போது இருந்திருக்காது. அன்றைக்கு கட்சி தொண்டர்கள் மாவட்ட செயலாளர் கேட்டுக் கொண்டதால் அன்றைக்கு கூட்டணி வைத்தோம், நாம் வெற்றி பெற்றோம். தமிழகத்தின் எதிர்க்கட்சியாக நாம் வந்தோம்.

இன்று பார்த்தீர்கள் என்றால் நாம் கெஞ்சவில்லை. அவர்கள் தான் நம்மிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்கள். காரில் என்னுடைய போன் இருக்கிறது, எடுத்து பாருங்கள். எத்தனையோ போன் வந்துள்ளது. நான் பெருமைக்கு சொல்லவில்லை. கேப்டன் தலைமையில் கூட்டணி அமைந்தால் நாங்கள் எல்லாம் வர தயாராக இருக்கின்றோம் என்று சொல்கிறார்கள்.

இருந்தாலும் நம்முடைய கட்சியினுடைய அங்கீகாரம் முரசு சின்னம் வேண்டுமென்றால் நமக்கு கிட்டத்தட்ட ஒரு எட்டு எம்எல்ஏக்களை வெற்றி பெற வேண்டும்.  நாம் அதற்காகத்தான் இந்த கூட்டணியில் இருக்கிறோம், பேசிப் பார்ப்போம் என்று பேசுகிறோம்.

அவர்கள் நினைக்கிறார்கள் எத்தனை சீட்டு உங்களுக்கு ? ராஜசபா மாநிலங்களவை சீட்டு தருவதாக கூறினார்கள் அதற்காக நாங்கள் என்றுமே ஆசைப்பட்டதில்லை. அப்படி ஆசைப்பட்டால் 2009இல் நான் வாங்கிக்கொண்டு சென்றிருப்பேன். 2014இல் வாய்ப்புகள் வந்தது. கேப்டனை பொறுத்தவரை வெற்றிபெற்று பாராளுமன்றம் செல்ல வேண்டும் அது தான் ஆசை எனமீண்டும் அதிமுக கூட்டணிக்கு எதிராக சுதீஷ் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |