Categories
பல்சுவை வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும்- பாலச்சந்தர்..!!

தமிழகத்தில் மற்றும் புதுவையில் 3 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார் 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசாகவும், மிதமாகவும் மழை பெய்யும்.

Image result for மழை

மேலும் பேசுகையில், மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்திலோ அல்லது இரவிலோ மழை பெய்யும் என அவர் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தாமரைப்பாக்கதில்  10 செமீ மழையும்,  போளூரில்  8 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

Categories

Tech |