Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு பல நன்மைகளை தேடித் தரும்…” இந்தக் கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்க”…. அம்புட்டு நல்லது..!!

மணத்தக்காளிக் கீரையின் பயன்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.

கீரை என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்காது. ஆனால் கீரையில் பல நற்குணங்கள் உள்ளது. உடம்பில் பல வியாதிகளுக்கு தீர்வாக கீரை இருக்கின்றது. கீரைகளில் பலவகை உண்டு. அத்தனை கீரைகளும் ஒவ்வொரு மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும். அதில் மணத்தக்காளி கீரையின் நற்குணங்களை இதில் பார்க்கப்போகிறோம்.

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை கொண்ட இந்த கீரையை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.

உடலை சுறுசுறுப்புடன் இயங்க வைப்பதோடு, உள்ளுறுப்புகளை பலப்படுத்துகிறது.

வளரும் குழந்தைகளுக்கு இந்த கீரையை செய்து கொடுத்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.

வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி கீரை ரசம் செய்து சாப்பிடலாம்.

மணத்தக்காளி செடியின் இலையை நன்றாக கசக்கி அதன் சாறு எடுத்து காய்ச்சல் இருக்கும் சமயத்தில் நெற்றியிலும் கைகளிலும் பற்று போல் போட்டு விட நன்கு குணமாகும்.

மணத்தக்காளி கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை உள்ளது. இதன் காய்களை வற்றல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.

மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கல் கரையும்.

சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் தன்மை கொண்டது.

Categories

Tech |