Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு… எச்சரிக்கும் நிபுணர்கள்… ஆபத்து…!!!

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சில நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவ தொடங்கியதால் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி உலக நாடுகளின் பட்டியலில் அதிக அளவு கொரோனாவால் பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. அதன்பிறகு அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல மாகாணங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு தொடர்புகளை அறிவிக்க வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கி தளர்த்துவது ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளதாகவும், இன்னும் சிறிது நாட்கள் பொறுமையாக ஊரடங்கு கொரோனா எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |