நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இடம் பெற நாங்கள் விரும்புகிறோம். அந்த காலத்தில் இருந்தே இந்து மக்கள் கட்சி அதிமுகவினுடைய அணியில் இருந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற விரும்புகிறோம்.
அதற்கான கடிதத்தை அதிமுக தலைமை இடத்திலே கொடுத்திருக்கிறோம். ஐந்து சட்டமன்ற தொகுதியில் வரை எங்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும் என்று சொல்லியும், எங்களையும் தேர்தல் கூட்டணியிலே இணைத்துக் கொள்ளும் படியும், பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்படியும் வேண்டுகோள் வைத்திருக்கிறோம்.அதேபோல பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைமைக்கும் நாங்கள் கடிதங்களை கொடுத்திருக்கிறோம். அதனுடைய தலைவர்களிடத்திலேயே பேசி வருகின்றோம் .ஹிந்து ஓட்டுவங்கி சிதறிவிடக்கூடாது.
கூட்டணிக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணியில் எங்களுக்கு பங்களிக்க வில்லை என்று சொன்னால்… கூட்டணியிலே இடம் கொடுக்கவில்லை என்று சொன்னால்….. 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி ஆன்மீக அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, இந்துத்துவ அரசியல் கொள்கைகளை முன்னிறுத்தி, வளமான தமிழகம் – வலிமையான பாரதம் என்கிற அடிப்படையிலே நாங்கள் தேர்தல் களம் காணு வோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.