Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் அப்-பில் இப்படி ஒரு வசதியா”…? வருகிறது புதிய அப்டேட்… என்ன தெரியுமா..?

வருங்காலத்தில் வீடியோக்களை மியூட் செய்து அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. எனினும் தற்போதைய பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். அனைவரின் செல்போனில் வாட்ஸ் அப் இல்லாமல் இருக்கவே முடியாது. ஏனெனில் யாருக்காவது ஒரு செய்தி அனுப்புவதற்கு, வீடியோ அனுப்புவதற்கு தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் வாட்ஸ்அப் உதவியாக உள்ளது. இடையில் கடந்த சில மாதங்களாக வாட்ஸ் அப் குறித்து பல தகவல்கள் பரவிவருகின்றது. வாட்ஸ்அப் அப்டேட் செய்யாதவர்கள் அதனை பயன்படுத்தி தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று கூறியுள்ளது .

இருப்பினும் மக்களை கவருவதற்காக அடிக்கடி சில அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொடுத்து வருகிறது . அந்த வகையில் தற்போது வீடியோக்களை  ம்யூட் செய்து  அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் தனிப்பட்ட அல்லது ஸ்டேடஸ களில் ஆடியோ அல்லது வீடியோக்களை அனுப்பும் முன்னால் பயனர்கள் அதனை மியூட் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஐஓஎஸ் பயனர்களுக்கு எப்போது இந்த வசதி வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. வாட்ஸ் அப் செயலியை தொடர்ந்து அப்டேட் செய்து வைப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும், அப்போது ஆடியோவை மியூட் செய்யும் வசதி தானாக திரையில் தோன்றும் என்றும் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து ஆடியோவை ம்யூட் செய்து வீடியோக்களை அனுப்பலாம், பகிரலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |