Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இவ்வளவு மருத்துவ குணங்களா…? வியக்க வைக்கும் “தொட்டாசிணுங்கி”…. நீங்களே பாருங்க..!!

தோல் வியாதியை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி இலையை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம்.

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்று கூப்பிடுவார்கள். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும்.

இந்த தொட்டாச்சுருங்கி இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்து சாறு எடுத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப் போட அந்த குழிபுண் விரைவில் குணமாகும்.

சக்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலையை பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குறையும்.

தொட்டாற்சுருங்கி இலை ஒரு பிடி எடுத்து அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

தொட்டாச்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்று போட வாதம் குறையும். தேமல் போன்ற இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் தேமல் குணமாகும்.

இந்த இலையை ஒரு கையளவு எடுத்து அரைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. மூல நோயை குணமாக்கும் தன்மை இந்த இலையில் உள்ளது.

Categories

Tech |