ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் நான்கில் மூன்று பங்கு பகுதியை கைப்பற்றியுள்ளதால் அரசு அப்பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கந்தஹார் பிராந்தியத்தின் ஆர்கான்பாத் மாவட்டத்தில் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 தலிபான்கள் ராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இச்சம்பவம் குறித்து அரசியல் நிபுணர்கள் கூறியதாவது, கடந்த ஓராண்டாக தலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அமெரிக்காவின் தலையிட்டு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான் சிறைக்கைதிகளை அரசு விடுதலை செய்தது என்று கூறியுள்ளார்கள். மேலும் தற்போது நடைபெற்ற இச்சம்பவம் அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.