Categories
உலக செய்திகள்

பொதுமக்களுக்கு கத்திக்குத்து…. இளைஞரின் வெறிச்செயல்…. 8பேர் காயம்…!!

ஸ்வீடன் நாட்டு பிரதான சாலையில்  பொதுமக்களை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டின் வெட்லாண்டா பகுதியில் உள்ள பிரதான சாலையில் அதிகாலை 3 மணியளவில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கையில் கத்தியை வைத்துக்கொண்டு சாலையில் செல்வோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரின் காலில் துப்பாக்கியால் சுட்டு  அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த தாக்குதல் நடத்தியவர் பயங்கரவாத கும்பலை சேர்ந்தவரா?, தாக்குதல் நடுத்த காரணம் என்ன? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |