Categories
மாநில செய்திகள்

விழிப்புணர்வு கொடுக்கும்…. இவர்களே இப்படி பண்ணலாமா…? சந்தேகத்தை கிளப்பும் செய்தி…!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஒரு அச்சம் இருந்ததன் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அரசியல் தலைவர்களான துணை முதல்வர் ஓபிஎஸ் எம்ஜிஎம் மருத்துவமனையிலும், கமலஹாசன் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், குஷ்பு அப்பல்லோ மருத்துவமனையிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இந்த தலைவர்கள் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டது அரசு மருத்துவமனையின் சேவையை நம்பாமல் தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொண்டு உள்ளார்களா? என்று சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

Categories

Tech |