Categories
சினிமா தமிழ் சினிமா

‘கர்ணன் டீசர் மிக விரைவில்’… தனுஷின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் தனுஷ் ‘கர்ணன்’ படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன் ‘. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு ,கௌரி கிஷன், லட்சுமி பிரியா ,லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது ‌‌. மேலும் சமீபத்தில் வெளியான இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன் டீசர் மிக விரைவில்’ என பதிவிட்டுள்ளார் . இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .

Categories

Tech |