Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பொதுத்தேர்வு ரத்து…? – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு…!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.

இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்து மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கு மறுநாள் (மே 3ஆம் தேதி) 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு தொடங்குவதால் ததேர்வு ரத்து செய்யப்படுமா? என்றும் கேள்விகள் எழத் தொடங்கின. இதற்கு பள்ளிக்கல்வித்துறை தற்போது விளக்கமளித்துள்ளது. அதாவது மே 3ஆம் தேதி திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். எனவே மாணவர்கள் தங்களுடைய தேர்வுக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |