Categories
உலக செய்திகள்

கொரோனா போனாலும்…. இதிலிருந்து மீள முடியாது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடையவில்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஆய்வில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்தாலும்  அதற்க்கான அறிகுறிகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்  6 முதல் 8 மாதங்கள் கடந்த பின்பும் அவர்களில் 50% பேருக்கு சோர்வு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |