அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்பவர்கள், வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தாம்பரம் ரயில்வே பணிமனையில் நடைபெற்ற பராமரிப்பு பணியின் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 20, 21ம் தேதிகளில் இரு வழித்தடங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் மார்ச் 14 முதல் 21ஆம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதற்கு நிறுத்துவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு வரும், 21 ஆம் தேதி இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்” என்று வெளியிட்டுள்ளது.