Categories
சினிமா தமிழ் சினிமா

‘பகவான்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட… பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி அர்ஜுனன் ரெட்டைசுழி ,மாயா, மாலை பொழுதின் மயக்கத்திலே ,நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார் . தற்போது ஆரி நடிப்பில் அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ,பகவான் உள்ளிட்ட சில படங்கள் தயாராகி வருகிறது .

சமீபத்தில் வெளியான பகவான் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை ஆரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதில் பகவான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |