அமெரிக்காவில் கடந்த ஆண்டு சந்தையில் ஒருவர் வாங்கிய கிண்ணத்தின் தற்போதைய விலை 500,000 டாலர் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான connecticutல் ஒருவர் கடந்த ஆண்டு சந்தையில் ஒரு கிண்ணத்தை பேரம் பேசி 35 டாலருக்கு இந்திய மதிப்பில் 2546 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த கிண்ணத்தை ஒரு புகைப்படம் எடுத்து கலை பொருள் நிபுணருக்கு அனுப்பியுள்ளார். அவர் அதை என்னிடம் நேரில் கொண்டுவந்து காண்பிக்கும்படி கூறியுள்ளார்.அவர் கொண்டுவந்த கிண்ணத்தை பார்த்துவிட்டு அந்த நிபுணர் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார். இந்த கிண்ணம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
தற்போது 300,000 டாலர் முதல் 500,000 டாலர் இந்திய மதிப்பில் 3,63,78,025 ருபாய் வரை விலை போகும் தகுதி உடையது. உலகளவில் இதுவரையில் ஆறு கிண்ணங்கள் மட்டும் தான் இதுபோல் தயாரிக்கப்பட்டதில் இதுவும் ஒன்று. மேலும் இரண்டு கிண்ணங்கள் தைவானின் தைபேயில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திலும், 2 லண்டனில் உள்ள அருங்காட்சியகத்திலும் மற்றுமொன்று டெஹ்ரானில் உள்ள ஈரானின் தேசிய அருங்காட்சியகத்திலும் உள்ளன. அந்தக் கிண்ணம் 1402 முதல் 1424 வரை ஆட்சி செய்த சீனாவின் ming வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் yongle அரச பேரவைக்காக பிரத்யோகமாக அமைக்கப்பட்ட கிண்ணம் என நிபுணர் கூறியுள்ளார்.