Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகல்?… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உடன் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவிடம் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். திமுக அதிக தொகுதிகள் ஒதுக்க விட்டால் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் திமுக கூட்டணியில் மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |