Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு… பரபரப்பு…!!!

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு 66 கோடி என்றும் அதனைப் போலவே குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் இடம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு ஒரு கோடி என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெறவில்லை.

இதனையடுத்து மகேந்திரன் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

நீதிபதி சத்தியநாராயணன், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ளவும், நீதிபதி ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொள்வதில் எந்த பயனும் இல்லை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தால் மகேந்திரன் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |