இந்தியா – இங்கிலாந்து அணியின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரரை குறிப்பிட்டு ரிஷப் பண்ட கூறிய வார்த்தை வைரலாகி வருகின்றது..
இந்தியா – இங்கிலாந்து அணி 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி மதிய இடைவேளை வரை 74 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாக் க்ராவ்லி 9 ரன்களிலும், சிப்லி 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.
இதனையடுத்து விக்கெட் கீப்பராக நின்று கொண்டிருந்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் “யாரோ கோபப்படுகிறார்கள்” என்று ஷாக் க்ராவ்லி அவுட் ஆகும் முன் அவரை குறிப்பிட்டு கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/i/status/1367338676099837952