Categories
உலக செய்திகள்

சிறுமிகளுக்கு ஏற்பட்ட நிலை…. போதை மருந்து கொடுத்து சீரழித்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து இரண்டு சிறுமிகளை சீரழித்த இரண்டு நபர்களை போலிசார் கைது செய்துள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் நார்மன் பெரி என்ற நபர் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை நியூ ஜெர்சிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தனது நண்பரான டைரில் பியாசா என்பவருடன் சேர்ந்து சிறுமிகளை ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமிகளுக்கு நார்மன் பெரி மற்றும் அவரது நண்பர் மது மற்றும் போதை மருந்துகளை கொடுத்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் சிறுமிகளை சீரழித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமிகள் உறவினர்களிடம் கூறவே போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவ்விருவரையும் கைது செய்துள்ளார்கள். மேலும் போலீசார் குற்றம் நிரூபணமானால் மட்டுமே அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |