Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை விட்டுட்டு போயிட்டா… கணவர் செய்த செயல்… போலீஸ் அதிரடி விசாரணை…!!

மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி கிராமத்தில் வசித்து வந்தவர் கதிரவன். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கதிரவன் அஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அஜிதா மட்டும் வேறு ஒருவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இதில் மனமுடைந்து காணப்பட்ட கதிரவன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனியாக இருக்கும்போது விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |