தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்,கிருஷ்ணமூர்த்தி இன்று திடீரென காலமானார்.
திருமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார். குமரி மாவட்டம் வடிவீஸ்வரம் கிராமத்தில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் தந்தை இராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் தினமலர் பதிப்புகளை தொடங்க காரணமாக இருந்தவர். மேலும் 2017 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தார். முதன்முதலில் கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எழுத்துருக்களை உருவாக்கியவர்.
தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரின் நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சந்தித்தது. இதனையடுத்து தமிழுக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது குடியரசு தலைவரால் இவருக்கு வழங்கப்பட்டது. சங்க கால நாணயங்கள் தேடி கண்டுபிடித்து, ஆராய்ந்து தமிழர் நாகரிகம் வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர். லண்டன் ராயல் நாணயவியல் கலகம் இவரை கௌரவப்படுத்தி கௌரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்