நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.
திரையுலகில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் முன்னணி நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் திரையுலகில் “முகமூடி” படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதன்பிறகு இவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக பூஜா ஹெக்டேவிற்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “தளபதி 65” படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரசிகர்கள் “தளபதி 65″படத்தை காண்பதற்கு மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.