Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘மாநாடு’… அப்டேட் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு …!!!

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா ,கருணாகரன், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ் ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த மாதம் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் மாநாடு படத்தின் அப்டேட் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . இது குறித்து அவர் ‘என்னுடைய நண்பர்கள் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு , எங்கள் படக்குழு சிறந்த படைப்பை உங்களுக்கு அளிப்பதற்காக முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது . இந்தப் படத்தின் அப்டேட்கள் படிப்படியாக சரியான நேரத்தில் வந்து சேரும். அதுவரை காத்திருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் . இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |