Categories
தேசிய செய்திகள்

“சென்ற வருடம் போன்று இந்த வருடமும் சிறப்பு ரயில் வேண்டும்”… தென்னக ரயில்வேக்கு மதுரை எம்பி கடிதம்..!!

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

மார்ச் 11 அன்று நடைபெற உள்ளது மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் மக்கள் குல தெய்வங்களை வழிபடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பெரும் எண்ணிக்கையில் பயணம் செய்வது வழக்கமான ஒரு விஷயம். அந்த வகையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11 ஆகிய நாட்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் இடம் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

கடந்த வருடம் எனது கோரிக்கையை ஏற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு தென்னக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கியது போன்று, இந்த வருடமும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.

Categories

Tech |