கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திவ்யகுசீலி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கள் காவல் நிலையத்தில் திவ்யகுசீலியின் தந்தை யோக முத்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.