Categories
சினிமா தமிழ் சினிமா

அங்க போனா உங்க உரிமம் ரத்து செய்யப்படும்…. மாநகராட்சி மிரட்டுவதாக பிரபல நடிகை குற்றச்சாட்டு…!!

நடிகை கங்கனா கட்டிட கலைஞர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தாம் தூள் படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது இணைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மராட்டிய அரசரை குற்றம் சாட்டினார். அதனால் மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தை மாநகராட்சியின் இடித்துத் தள்ளினர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கனா அலுவலகத்தை இடித்துத் தள்ளிதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நடிகை கங்கனாவிற்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகை கங்கனா அலுவலகத்தின் மதிப்பிட எந்த கலைஞர்களும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது கட்டிடத்தை இடித்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. இதற்காக நான் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில் வென்றுள்ளேன். அதனால் ஒரு கட்டிடக் கலைஞர்கள் மூலமாக இதற்கான நஷ்ட ஈடு தொகை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இதற்கு எந்த கட்டிடக் கலைஞரும் ஒப்புக்கொள்ளவில்லை. அப்படி யாராவது ஒப்புக்கொண்டால் அவர்களின் உரிமத்தை ரத்து செய்வோம் என்று அவர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |