தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த வாலிபரால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவாரூர் மாவட்டத்தில், குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரனின் மகனான 22 வயதுடைய மனோ. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாபநாசம் பகுதியில் உள்ள சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் மனோ அடிப்பட்டு பிணமாக இருந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மனோவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த மனோ வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான சங்கரின் அண்ணன் மகன் ஆவார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் பாதையை கடக்க முயலும்போது விபத்து ஏற்பட்டதா அல்லது ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டாரா ,என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.