Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …!!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி சென்னையில் மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பிக்கு ஆதரவாகவும், குற்றம் சாட்டப்பட்ட டிஜிபிக்கு ராஜேஷ் தாசை கைது செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ராஜேஷ் தாசுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் சுகந்தி பேசுகையில், சட்ட ஒழுங்கு காவல்துறையினுடைய டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸை மீது பெண் காவலர்  உயர் அதிகாரி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு புகார் கொடுத்திருக்கின்றார். இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடந்த 27 ஆம் தேதி டிஜிபியை  சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். அதற்குப் பின்பு சிபிசிஐடி விசாரணை உத்தரவிடப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பெண்கள் மீதான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. பதிவு செய்யப்பட்டு 5 நாட்களாகியும், டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யவில்லை என்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இதே பிரச்சனையை வேற ஒரு குற்றவாளி செய்திருந்தால் உடனடியாக தமிழக காவல்துறை கைது பண்ணியிருக்கும். தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை, சாதாரண ஆயா வேலை பாக்குற பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

ஆனால் இந்த எடப்பாடி அரசாங்கம்….  தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லி பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே  ஏழை எளிய  பெண்களில் இருந்து ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் வரை பாதுகாப்பு இல்லாத தமிழகம் ஆக இந்த தமிழகம் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

Categories

Tech |