Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்… வெளியான தகவல்…!!!

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவாட் அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றது.இந்த அமைப்பின் தலைவர்கள் கூட்டம்மிக விரைவில்  நடைபெற இருக்கிறது . மேலும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் இந்தியா பசிபிக்பிராந்தியம் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது . இதனை கருத்தில் கொண்டு இந்தியாவுடனான உறவைமேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்கவெளியுறவு பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் என்பவர் இம்மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வர உள்ளார் .

அதுமட்டுமன்றி இந்தியாக்கு வரும் அவர் டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க உள்ளார். அதன் பிறகு இந்தோ பசுபிக் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய சீனா நாடுகளுக்கிடையேயான கிழக்கு லடாக் பகுதியை ராணுவம் திரும்பப் பெறும் நடவடிக்கையில் இருப்பதால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Categories

Tech |