Categories
உலக செய்திகள்

“என் மகனை காணோம் பதறிய தாய்”… காதலருடன் சேர்ந்து செய்த செயல் .. வீடியோ காட்சியில் வெளிவந்த உண்மை..!!

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகனை தானே கொன்றுவிட்டு காணவில்லை என்று தன் காதலருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இங்கிலாந்தில் உள்ள மிடில்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் கோஸ்னே(29) மற்றும் அவரின் காதலர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் 6 வயது மகனை சனிக்கிழமையில் இருந்து காணவில்லை என்று பதறியவாறு பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறுவனின் தாய் கோஸ்னே மற்றும் அவரின் காதலர் ஜேம்ஸ் ஆகிய இருவரும் சிக்கிவிட்டனர்.

அதாவது இவர்களின் வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூங்காவிற்கு தன் மகனை கோஸ்னே அழைத்து சென்று சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு இவர் மட்டும் வந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பூங்காவிற்கு சென்ற கோஸ்னே சிறுவனின் உடலை மட்டும் எடுத்து வந்திருக்கிறார்.

மேலும் காவல் துறையினரிடம் புகார் தெரிவிப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுவனின் உடலை அங்கிருக்கும் ஆற்றில் வீசிவிட்டு, அதற்கு  மறுநாள் புகார் தெரிவித்துள்ளனர். இதனை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறிந்து இருவரையும் உடனடியாக கைது செய்துள்ளனர்.

அதன் பின்பு காவல்துறையினரின் தொடர் விசாரணையில் தன் மகனை கொன்றதை கோஸ்னே  ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எதற்காக கொலை செய்தார்? என்பதை அவர் தெவிவிக்காததால் சிறுவனின் பள்ளி ஆசிரியர்கள் எதற்காக தன் மகனையே கோஸ்னே கொன்றார் என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிறுவனின் தந்தை லீவிஸ் தன் மகனை கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று  தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |