வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் கிராமத்தில் செல்லத்துரை என்ற பிரபல ரவுடி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய குற்றவாளியான வேலூரைச் சேர்ந்த வசூர்ராஜா என்ற ரவுடி தலைமறைவாக இருந்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக சேலம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் கிரிபாளையம் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வசூல்ராஜாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது “ரவுடி செல்லதுரையை கொலை செய்வதற்காக வேலூரை சேர்ந்த ரவுடி வசூர்ராஜாவிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்து சேலத்தாய் சேர்ந்த ரவுடிகள் அழைத்து வந்துள்ளனர். மேலும் செல்லத்துரை காரில் சென்று கொண்டிருந்தபோது காரை வழிமறித்து நிறுத்தி வசூர்ராஜாவின் கூலிப்படையினர் முதலில் செல்லத்துரையை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன்பின் சேலத்தைச் சேர்ந்த ரவுடிகள் அவரை வெட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.