பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சம்யுக்தா. இவரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதால் சம்யுக்தா , பாவனா இருவரும் சகோதரிகளா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சம்யுக்தா எனக்கு சொந்த சகோதரி இல்லை. ஆனால் அவர் என் இன்னொரு அம்மா மூலம் கிடைத்த சகோதரி’ என்று பதிலளித்துள்ளார் . மேலும் இதுகுறித்து சம்யுக்தா ‘பாவனா என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவி . அவர் என் பக்கத்து வீட்டில் குடியிருந்தார் . அவரை எனக்கு நன்றாக தெரியும்’ என்று கூறியுள்ளார்.