காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து மோதி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் பரிதிவளவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பரிதிவளவன் வேலைக்கு சென்று விட்டு சேர்க்காடு பகுதியில் வசித்து வரும் தனது மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பரிதிவளவன் மீது வேகமாக மோதியது. இதில் மோசமாக காயமடைந்த பரிதிவளவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வாலாஜாபாத் காவல்துறையினர் பரிதிவளவன் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.