நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இது கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தில் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுனாமி அலைகள் சாத்தியமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.