உத்திரகாண்டில் பெய்த கனமழையில் ஏற்ப்பட்ட மண் சரிவால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம் நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை முடக்கம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்தை அடைந்தனர்.
இதனையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அவசர அவசரமாக சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் அதிஷ்டவசமாக எந்த உரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களை கவனமாக ஓட்டி செல்லுமாறு தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடையே அறிவுறுத்தினர்.